Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜுவை கலாய்த்த தி.மு.க எம்எல்ஏ-க்கள்

சட்டப்பேரவையில் இன்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருந்தபோது, 'தெர்மக்கோல்... தெர்மக்கோல்' என்று கூறி, தி.மு.க உறுப்பினர்கள் கூச்சலிட்டதால், அவையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்துநின்று இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, எம்எல்ஏ செங்குட்டுவன், கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகளில் திருட்டுச் சம்பவம் நடைபெறுவதால், சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்றும்  நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு வேளாண் வங்கிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் சுற்றுச்சுவர் எழுப்பப்படும். 4 லட்சத்து 65 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் பாதுகாப்பாகவே உள்ளன. கடந்த  ஆறு ஆண்டுகளில் 4 ஆயிரத்து 677 கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து 66 ஆயிரம் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருந்தபோது... தி.மு.க உறுப்பினர்கள், 'தெர்மக்கோல்... தெர்மக்கோல்' என கூச்சலிட்டனர்.  இதனால், பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement