Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவல்துறையின் கதிராமங்கலம் ஃபார்முலா பக்கத்து கிராமங்களுக்குமா?

மயிலாடுதுறை அருகேயுள்ள கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பராமரிக்கும் பணிக்காக சில பொருள்களை இறக்கினர். ஆனால், அவை ஷேல் கேஸ் எடுப்பதற்காக புதிதாக பதிக்கப்படும் குழாய்கள் என அந்தக் கிராமத்து மக்கள் எதிர்த்தனர். காவல்துறை 144 உத்தரவு போடப்பட்டதாகக் கூறி, ஊர் முழுவதும் போலீஸாரை நிறுத்தி, அந்தப் பணிகளை முடித்தது. எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட சிலர், கதிராமங்கலம் கிராமத்தில் நுழையக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன்தான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இன்றும் கதிராமங்கலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் போலீஸார் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இதுபோன்ற பணிகளை, கதிராமங்கலம் எவ்வாறு செயல்படுத்தினார்களோ, அதே முறையைக் கடைபிடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதனால், கதிராமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் பதற்றத்தில் உள்ளன. அதனால், தங்கள் கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டால், என்னசெய்வது என பொதுமக்கள் குழப்பத்திலும் அச்சத்திலும் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement