Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’மாப்பிள்ளை இவர்தான், ஆனால் இவரின் சட்டை என்னுடையது’ - படத்தின் காமெடியைச் சொல்லி மு.க.ஸ்டாலின் கலாய்ப்பு

அ.தி.மு.க எம்எல்ஏ சரவணன் குதிரை பேரம்குறித்துப் பேசும் வீடியோ விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

M.KStalin
 

இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில், கூவத்தூரில் பேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோகுறித்து மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். மேலும், இந்த விவகாரம்குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் தனபால், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், விவாதிக்க முடியாது என மறுத்துவிட்டார். இதனால், தி,மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் பேரவையை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறை கைதுசெய்து அழைத்துச்சென்றது. 

m.k.stalin

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘கூவத்தூர் விடுதியில் நடைபெற்றுள்ள குதிரை பேரம், தமிழக அரசுக்கு அவமானம். ”அந்த வீடியோவில் உள்ளது நான்தான். ஆனால் பேசியது நான் இல்லை” என்று எம்எல்ஏ சரவணன் கூறியிருக்கும் விளக்கம் ”இவர்தான் மாப்பிளை. ஆனால். இவர் அணிந்திருக்கும் சட்டை அவருடையது கிடையாது” என்னும் திரைப்பட காமெடி காட்சியை நினைவுப்படுத்துகிறது. இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement