Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலியல் குற்ற வழக்கில் குழந்தையின் ஓவியம் ஆதாரமானது!

குழந்தை

டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில், குழந்தை வரைந்த ஓவியத்தை அடிப்படையாகக்கொண்டு, பாலியல் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தாய் இறந்து, தந்தையால் அனாதையாக விடப்பட்ட 8 வயது பெண் குழந்தை, அத்தையின் பராமரிப்பில் வளர்ந்துவந்தார். அத்தையின் கணவர் அக்தர் அகமது, அந்தக் குழந்தையை யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சிசெய்து வந்துள்ளார்.

இந்தக் குற்றச்செயல் தெரியவந்ததும் அக்தர் அகமது கைதுசெய்யப்பட்டார். குழந்தை, பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்கான ஆதாரமாக மருத்துவச் சான்றிதழ் இருந்தபோதும், அக்தர்அகமது தன்னை ஓர் அப்பாவியாகக் காட்டி வந்துள்ளார். நீதிபதி, அந்தக் குழந்தையிடம் நடந்த விஷயங்களை வரையச்சொல்லி கிரையான்ஸும் பேப்பரும் வழங்கியுள்ளார். ஒரு வீட்டில் குழந்தை நிர்வாண நிலையில் கையில் பலூன்கள் வைத்திருந்த நிலையில் நின்றுகொண்டிந்தது போலவும், அதன் அருகே ஆடைகள் களையப்பட்டு கீழே இருப்பதுபோல வரைந்திருந்தார். குழந்தையின் ஓவியத்தையும் மருத்துவச் சான்றிதழையும் ஆதாரமாக எடுத்துக்கொண்ட நீதிபதி, குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலிருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement