பாஜகவில் இணைந்தார் பிரபல தமிழ் நடிகர்!

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம். இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவந்தார். இந்தநிலையில், சென்னை தி.நகரிலுள்ள பொன்னம்பலம் இல்லத்துக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வருகைத் தந்தார். அப்போது, பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார் பொன்னம்பலம். அவருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

பாஜகவில் சேர்ந்தது குறித்து பொன்னம்பலம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பாஜகவினர்தான். தற்போதுள்ள சூழ்நிலையில் பாஜகவால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த காலத்தில் அதிமுகவில் ஒழுக்கம், கட்டுப்பாடு இருந்தது" என்று கூறினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!