சவுதி பாலைவனத்தில் 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக வாழ்ந்த ரியல் ’மரியான்’..! | Gana Prakasam Rajamariyan to return India after 24 years living in Saudi Arabia

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (14/06/2017)

கடைசி தொடர்பு:12:55 (15/06/2017)

சவுதி பாலைவனத்தில் 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக வாழ்ந்த ரியல் ’மரியான்’..!

கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்ட நாடான சவுதி அரேபியாவில், 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக வாழ்ந்துள்ளார் தமிழர் ஒருவர். 

Gana Prakasam Rajamariyan
 

இதுதொடர்பாக சவுதி ஊடகங்களில் வெளியான தகவல் பின்வருமாறு...

 

’தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் ஞான பிரகாசம் ராஜமரியான். இவர் 1994 ஆம் ஆண்டு சவுதியின் ஹெயில் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அவருக்கு அந்த பண்ணையில் சரியான ஊதியம் வழங்கப்படாததால் அவர் அங்கிருந்து தப்பித்து சவுதியிலுள்ள பாலைவன பகுதியில் சட்டவிரோதமாக வசிக்க தொடங்கியுள்ளார். 1994 ஆம் ஆண்டு தமிழகத்தை விட்டுவந்த ஞான பிரகாசம், அதன் பிறகு தன் சொந்த மண்ணுக்கு ஒருதடவைக் கூட செல்லவில்லை. ஆனால், தன் குடும்பத்துக்குத் தவறாமல் பணம் அனுப்பி வந்துள்ளார். ஞான பிரகாசம் வீட்டைவிட்டு வந்தபோது அவரின் நான்கு பெண் பிள்ளைகளும் சிறுமிகளாக இருந்துள்ளனர். அவர்களுக்கு நான்கு பேரின் திருமணத்துக்கும் இவர் போகவில்லை. தற்போது, ஞான பிரகாசத்துக்கு 52 வயது. அவர் சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியுடன் தற்போது தமிழகம் திரும்பவுள்ளார்’ 

இவ்வாறு ஞான பிரகாசம் குறித்து சவுதி ஊடங்களில் செய்தி வெளியாகி உள்ளன. இவரின் வாழ்க்கை 'மரியான்' படத்தை நினைவூட்டுகிறது.

விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக சவுதியில் வசிக்கும் பிற நாட்டவருக்கு 90 நாள்கள் கருணை காலம் கொடுத்துள்ளது சவுதி அரசு. அதன்பிறகும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞான பிரகாசம் குறித்து தமிழக அரசோ, மத்திய வெளியுறவு அமைச்சகமோ எந்தத் தகவலும் வெளியிடவில்லை.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க