Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டாலின் கைது: கிருஷ்ணகிரியில் 10 இடங்களில் சாலை மறியல்; 300-க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கைது

மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.கவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள் பணம் பெற்றதாக வெளியான செய்தி குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்எல்ஏ-க்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கிழக்கு மாவட்டச் செயலாளர் சுகவனம் தலைமையில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 45 பேர் கைது செய்யப்பட்டனர். பர்கூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரும், ஓசூரில் 42 பேரும், தளியில் 15 பேரும், அஞ்செட்டியில் 30 பேரும், வேப்பனஹள்ளியில் 20 பேரும், சூளகிரியில் 15 பேரும், போச்சம்பள்ளியில் 40 பேரும், ஊத்தங்கரையில் 30 பேரும், சிங்காரப்பேட்டையில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். 10 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில், 302 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement