பணம் வாங்கினேன் என்று நிரூபித்தால்...எம்எல்ஏ தனியரசு விட்ட சவால்!

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவளிக்க, என்னிடம் பணம் பேரம் பேசப்பட்டதாகக் கூறுவதை உண்மை என நிரூபித்தால், பதவி விலகத் தயார் என்று தனியரசு எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

thaniarasu

அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் இருந்தபோது, சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கிலத் தொலைக்காட்சி திடுக்கிடும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது. அந்த வீடியோவில், கூவத்தூரிலிருந்து தப்பி வந்த எம்எல்ஏ சரவணனின் உரையாடல் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் பேசும் சரவணன், 'சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறினார். குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுக்குதான் அதிக அளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று பேசியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு, ‘எடப்பாடி அரசுக்கு ஆதரவு தெரிவிக்க நான் அவர்களிடம் பணம் வாங்கினேன் என்ற குற்றசாட்டை நிரூபித்தால், நான் என் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அவ்வாறு நிரூபித்தால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்’ என்று சவால் விடுத்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!