திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி: அமைச்சர் அன்பழகன் தகவல்..! | Tirunelveli MS university will give free education for trandsgenders

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (15/06/2017)

கடைசி தொடர்பு:15:06 (15/06/2017)

திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி: அமைச்சர் அன்பழகன் தகவல்..!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், 'திருநங்கைகளுக்கு இலவசமாகக் கல்வி வழங்கப்படும்' என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 


தமிழக சட்டப்பேரவையில், துறைரீதியான திட்டங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சிகளின் கேள்விக்குத் துறை அமைச்சர்கள் பதிலளித்துவருகின்றனர். அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், 'திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், திருநங்கைகளுக்கு இலவசமாகக் கல்வி வழங்கப்படும். கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு 3,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.