பத்திரப்பதிவு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் புது விளக்கம்..!

பத்திரப் பதிவு தடை உத்தரவுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை மறு பதிவு செய்துகொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்யவும், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தடை விதித்தது.

இதை எதிர்த்து மனை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீட்டு மனைகள் பத்திரப் பதிவு தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் தமிழக அரசு சந்தேகங்களை எழுப்பியது. அதற்குப் பதிலளித்த உயர்நீதிமன்றம், '20-10-2016 ஆம் ஆண்டுக்குமுன் பத்திரப் பதிவு செய்த மனைகள் மறு பதிவு செய்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த கட்டணங்கள் செலுத்தி மனைகள் கட்டிக்கொள்ளலாம். பத்திரப் பதிவுத் தடை அமலிலிருந்த காலத்தில் பதிவு செய்த வீட்டுமனைகள் செல்லாது' என்றும் விளக்கமளித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!