ராமேஸ்வரத்தில் தரம் குறைந்த தடுப்புச் சுவர்: மீனவ மக்கள் புகார்..!

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள சின்னப்பாலம் கிராமத்தில் கடலரிப்பைத் தடுப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர் தரமில்லாமல் இருப்பதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 


ராமேஸ்வரத்தையடுத்து உள்ளது சின்னப்பாலம் கிராமம். இந்தக் கிராமம் கடலரிப்பாலும், கடல் நீர் ஊருக்குள் புகுவதாலும் பாதிக்கப்பட்டு வருவதாக ஊர் மக்கள் தெரிவித்து வந்தனர். எனவே, தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், 2016-2017-ம் ஆண்டுக்கான தொகுதி நிதியிலிருந்து 43 லட்ச ரூபாய் மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. 100 மீட்டர் நீளமும் 3 அடி உயரமும் உள்ள இந்தத் தடுப்புச் சுவரைத் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் திறந்துவைத்தார்.

அந்தத் தடுப்புச்சுவர் தரமில்லாமல் இருப்பதாகக் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அந்த சுவர் ஒரு மாத காலத்துக்குக் கூட தாங்கும் நிலையில் இல்லை. சிறுவர்கள் அந்தச் சுவரின் மேலே ஏறி விளையாடும்போது உடையும் நிலையிலேயே உள்ளது என்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!