தினகரன் எதிர்பார்க்கும் மாற்றம் தமிழகத்தில் ஏற்படுமா? #Video

தினகரன்

.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவதற்குப் பேச்சுவார்த்தை நடக்கவிருந்தது. அதை, இப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலைத்துவிட்டார். சசிகலா அணியில் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் டி.டி.வி.தினகரன், இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காகத் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீஸாரால் கைதுசெய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, அவர் ஜாமீனில் வெளிவந்தார். இதைத் தொடர்ந்து, இரு அணிகளின் இணைப்பையும் முற்றிலுமாகக் கலைத்துவிட்டார் பன்னீர்செல்வம். அ.தி.மு.க அணியில் அடுத்து யார் முதலமைச்சர் பதவியில் இருப்பார்கள் என்பது அந்தக் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களுக்கே தெரியாத ஒரு விஷயமாக இருக்கிறது. அதனால், ஒவ்வொருவரும் முதலமைச்சராக வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். தினகரன் வெளிவந்த பிறகு, இணைப்பைக் கலைத்தவிட்ட பன்னீர்செல்வத்தின் அடுத்த திட்டம் என்ன... எந்தக் காரணத்துக்காகச் சந்திப்பைக் கலைத்தார்... தினகரனுக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் அதிமானதுதான் கட்சியில் இருக்கும் குழப்பங்களுக்குக் காரணமா என்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பார்க்கவும்...

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!