வெளியிடப்பட்ட நேரம்: 08:39 (16/06/2017)

கடைசி தொடர்பு:08:39 (16/06/2017)

புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி உண்ணாவிரதம்..!

புழல் சிறைக்கு மாற்றக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் நளினி ஆகியோர் சிறையில் இருந்துவருகின்றனர். நளினி வேலூர் பெண்கள் சிறையில் இருந்துவருகிறார். தற்போது அவர், தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி சிறைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனது மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. புழல் சிறையில் இருந்தால் திருமணத்துக்கு உதவுவதற்கு ஏதுவாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கோரிக்கை மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி நளினி உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.