Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிடி ஆதாரத்தைக் காட்டினேன், பேச மறுக்கிறார்! வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் காட்டம்

ஆளும்கட்சி எம்எல்ஏ-க்கள் பணம் பெற்றதாகக் கூறப்படும் சிடி ஆதாரத்தைச் சட்டப்பேரவையில் காட்டிய பிறகும் இது குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பதாக வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப்பேரவை கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே ஆளும் கட்சி எம்எம்ஏ சரவணன் குதிரை பேர வீடியோ விவகாரம் வெடித்தது. திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம், சாலை மறியல் எனப் பரபரப்புடன் காணப்பட்டது தலைமைச் செயலகம். இரண்டாவது நாளான நேற்று மீண்டும் இதே பிரச்னையை திமுக எழுப்பியது. சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இன்றும் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் பணம் பெற்றதாகக் கூறப்படும் சிடி ஆதாரத்தைச் சட்டப்பேரவையில் காட்டினேன். இது குறித்து பேச இரண்டு நாள்களாக அனுமதி மறுக்கப்படுகிறது. சபாநயாகர் கூறியபடி வீடியோ ஆதாரத்தைச் சட்டப்பேரவைக்குக் கொண்டு வந்தேன். வீடியோ ஆதாரம் குறித்துப் பேசினால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது. எம்எல்ஏ-க்கள் பணம் பெற்ற விவகாரம் தமிழகத்துக்கே மிகப்பெரிய அவமானம்" என்றார்.

பின்னர் பேசிய துரைமுருகன், வீடியோ விவகாரத்தில் அமைச்சரின் தலையீட்டால் சபாநாயகர் அந்தர்பல்டி அடிக்கிறார். சபாநாயகரின் முடிவில் அமைச்சர் ஜெயக்குமார் தலையிடுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement