Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவையில் போலீஸை மிரளவைத்த போராட்டம்!

மாடுகளை இறைச்சிக்காக விற்கத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக மாட்டுத் தலைகளுடன் போராட்டம் நடத்திய, ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாடுகளை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக மாட்டிறைச்சிப் படையல் வைத்துப் போராட்டம் நடத்தப் போவதாக ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர் அறிவித்து இருந்தனர். காவல்துறையினர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையைமீறி ஆதித் தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் முருகன் உள்ளிட்ட 20 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில், அந்த அமைப்பைச் சேர்ந்த இருவர் மாட்டுத் தலைகளுடன் சாலையின் நடுவே ஓடிவந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தியதோடு, இரண்டு மாட்டுத் தலைகளைக் கைப்பற்றியதுடன் அந்த இருவரையும் கைது செய்து வாகனத்தி்ல் ஏற்றிச்சென்றனர்.

இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டுதலைகளுடன், ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர் நடத்திய போராட்டம் காரணமாக செஞ்சிலுவைச் சங்கம் அருகே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. கைது செய்யப்பட்ட ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement