கோவை மார்க்சிஸ்ட் அலுவலகத்தின்மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

kovai

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. கோயம்புத்தூர் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதுகுறித்து, அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில், அலுவலகத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம் சேதமடைந்துள்ளது. பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கோவை மார்க்சிஸ்ட் அலுவலகத்தின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!