Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடலைமிட்டாயைக் கூட கசக்க வைக்கும் ஜி.எஸ்.டி.!

கடலைமிட்டாய்

மிழனின் நொறுக்குத்தீனிகளில் கடலை மிட்டாயும் முக்கியமான ஒன்று. கல்யாண சாப்பாடு இலைகளில் கடலைமிட்டாயை வைத்து கடைசிப் பையனின் கல்யாணம் என்ற சேதி சொல்லுவது தென் மாவட்ட மக்களின் பாலிசி. பொஞ்சாதி வயலுக்குச் சாப்பாடு கொண்டார நேரம் ஆச்சுனா பசி தாங்க விவசாயிக்குச் சிற்றுண்டி, கடலை மிட்டாய்தான்.

பள்ளி மாணவர்கள் கடுக்கு முடுக்குனு நொறுக்கித் தின்று உடல் வழுவா விளையாட உடல் சக்தியைத் தாக்குப் பிடிக்கிறதும் இந்தக் கடலை மிட்டாய்தான். இப்படி அடுக்கிகிட்டே போலாம் கடலைமிட்டாய் பெருமைய. கடலை மிட்டாய்க்குதான் இப்ப வந்துருக்கு ஜி.எஸ்.டி என்கிற கடுமையான ஆப்பு . ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு நம்ம ஊர் கடலை மிட்டாயும் தப்பவில்லை என்பதுதான் கொடுமையான விஷயம். கலோரி, புரதம், கனிமச் சத்துகள், கொழுப்புச் சத்து உள்ளிட்ட பல நல்ல அம்சங்களை உடலுக்கு ஆற்றலா வழங்குது கடலை மிட்டாய் . எளிமையான இந்தத் திண்பண்டத்துக்குக்கூட பதினெட்டு சதவீதம் வரி விதித்துள்ளது அரசாங்கம் , கடலை மிட்டாய்க்குப் பின்னாடி பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது . இதுதான் பல ஏழைக்குழந்தைகளுக்குக் கிடைத்த நல்ல திண்பண்டம். இதுக்கும் வரி விதிச்சா கடலை மிட்டாய் வியாபாரம் கடுமையாப் பாதிக்கப்படும் என்று கதறுகின்றனர் வியாபாரிகள்.

GST

இது தொடர்பாக மதுரையிலுள்ள கணேச விலாஸ் கடலை மிட்டாய் உற்பத்தியாளர் மணி முத்துராஜா அவர்களைச் சந்தித்துப் பேசினோம்; "கடலை மிட்டாய் தயாரிப்பை ஒரு குடிசைத் தொழிலாகக் கடந்த 50 வருடங்களுக்கு மேலாகச் செய்துவருகிறோம். பல ஏழைகளுக்கு  வாழ்வாதாரமா இருக்கு. கடலை மிட்டாயை ஆரம்ப காலகட்டதில் தயாரித்த பக்குவத்தில்தான் இன்றளவிலும் தயாரிக்கிறோம். எந்த ஓர்   இயந்திரத்தின் உதவியும் இல்லாமல், வேலை ஆட்கள் வைத்து கைகளின் மூலமாகவே தயாரிக்கிறோம். ஆனால், நாங்கள் நவீன இயந்திரங்கள் வைத்து,  பல லட்ச ரூபாய் லாபம் பார்பது போல் கடலை மிட்டாய்-க்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இதனால் இந்தக் குடிசைத் தொழிலை நம்பியுள்ள ஏழைகள் பாதிக்கப்படுவர்.  

கடலைமிட்டாய்உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். கடலை மிட்டாய் வாங்குவதற்குக் கூட பொது மக்கள் அதிகளவு யோசிப்பார்கள். எனவே, கடலை மிட்டாய் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். கடலை மிட்டாய் மட்டுமல்ல, பொட்டுக் கடலை மிட்டாய், பொறி உருண்டை, கமர்கட்டு, எள்ளு மிட்டாய், தேங்காய் மிட்டாய் ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிலுள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்றார். 

மிட்டாய்கள் சங்க மாநிலத் தலைவர் பாண்டி அவர்களிடம் பேசினோம். "கடலை மிட்டாய், இதர திண்பண்டங்களுக்கு வாட் வரி கிடையாது. ஆனால், இப்போது ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதால் உற்பத்தியாளர்கள் அதிகளவு வரி கட்ட வேண்டியது இருக்கும் இழப்பைக் குறைக்க மிட்டாய்களுக்கு அதிக விலை நிர்ணயிக்க வேண்டி வரும். இதனால், கடலை மிட்டாயை வாங்கக்கூட பொதுமக்கள் யோசிப்பார்கள். இது தொடர்பாக, டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் பேசினோம். கடலை மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்களுக்கு வரி விலக்கு அளிக்கப் பரிந்துரை செய்வதாக உறுதியளித்துள்ளார்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement