71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்.. சென்னையை அலற வைக்கும் போதை 'மாஃபியா'

சென்னையில் ரூபாய் 71 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

drugs

சென்னையில் தொடர்ந்து போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதையடுத்து, இன்று மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். செங்குன்றத்தில் இருக்கும் தனியார் ஆலையில் அவர்கள் சோதனை நடத்தினர். இதில், 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளில், 90 கிலோ ஹெராயின், 11 கிலோ மெத்தா பெட்டமைன், 56 கிலோ சூடோ பெட்ரின் ஆகிய போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்களில், இது பெரிய அளவிலானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!