மோடி... ட்ரம்ப் அனைவரையும் விட, அதிக ட்விட்டர் ஃபாலோயர் இவருக்குதான்!

உலகில் உள்ள பெரும்பாலான பிரபலங்களும், ட்விட்டர் சமூக வலைதளத்தில் கணக்கு வைத்துக்கொள்வதை விருப்பமாக வைத்துள்ளனர். சொல்லவரும் விஷயத்தை 140 கேரக்டருக்குள் பகிரவேண்டும் என்பது ட்விட்டரில் இருக்கும் சவாலான விஷயம்.

Katy Perry

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 32.4 மில்லியன். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 30.7 மில்லியன் ஃபாலோயர்கள் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட, பாப் பாடகி கேட்டி பெர்ரிக்குதான் ட்விட்டரில் அதிக ஃபாலோயர் உள்ளனர். நேற்று ட்விட்டர் வரலாற்றில் முதல்முறையாக 100 மில்லியன் ஃபாலோயர் பெற்று மற்றொரு பெருமைக்கும் சொந்தக்காரி ஆகியிருக்கிறார் இவர்.

இதைக் கவுரவிக்கும் பொருட்டு, ட்விட்டர் புதிய எமோஜி ஒன்றையும், வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. ட்விட்டரில் #LoveKaty என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தினால், அத்துடன் 100 மில்லியனைக் குறிப்பிடும் எமோஜி ஒன்று ட்விட்டரில் உருவாகும்.

இந்நிலையில், கேட்டி பெர்ரியின் 100 மில்லியன் ஃபாலோயரில் Bot-கள் தான் அதிகம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், ட்விட்டர் நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!