Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு!

திமுக முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி மறைந்ததையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் பெரியசாமி. பல ஆண்டுகாலமாக இவர் இந்த பதவியை வகித்து வந்தார். திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த பெரியசாமி அண்மையில் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இதனால் தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு காலியானது. ஏற்கெனவே மாவட்டச் செயலாளர் பதவியை பெறுவது தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், பெரியசாமிக்கும் இடையே கடும் போட்டிநிலவியது. இதில் பெரியசாமியே வெற்றி பெற்றார்.

தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவியில் பெரியசாமி கோலாேச்சியதால் அனிதா ராதாகிருஷ்ணன், மீண்டும் அதிமுகவில் சேரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், அவரை சந்திக்க ஜெயலலிதா மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது, "திமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும், அதிமுகவில் நான் சேரப்போவதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது" என்று மறுத்தார்.

பெரியசாமி மறைந்ததையடுத்து தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. தற்போது அந்த பதவிக்கு திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த அ.சுப்பிரமணி அப்பொறுப்பிலிருந்து விலகியதால் பெரியசாமியின் மகள் கீதாஜீவனிடம் அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் என்.பெரியசாமி மறைவெய்தியதாலும் - தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் அ.சுப்பிரமணி அப்பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதாலும் இவ்விரு மாவட்டக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற; தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கீதா ஜீவனும், திருச்செந்தூர், திருவைகுண்டம், ஒட்டபிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக அனிதா ஆர். ராதாகிருஷ்ணனும் நியமிக்கப்படுகிறார்கள்.

ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தூத்துக்குடி வடக்கு மற்றும் தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், திமுக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக அ.சுப்பிரமணி நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுவார்" என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement