சென்னையில் முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 2000 பேர் கைது!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் கடந்த மே மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மே 21 ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்திய வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இன்று சென்னையில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரின் கைதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சென்னையில் பேரணி நடைபெற்றது. இதில் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற இவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேல்முருகன் உட்பட 2000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!