வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (17/06/2017)

கடைசி தொடர்பு:19:22 (17/06/2017)

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி மனிதச் சங்கிலி

செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எய்ம்ஸ்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதில் திருச்சி, தஞ்சை, மதுரை என பல ஊர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவந்தன. மேலும், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதனால், இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் சட்டமன்றத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கிபட்டியில் அமையாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..

இதையடுத்து அப்பகுதி மக்கள் இன்று மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள், வயதானவர்கள் உட்பட 2000க்கும் மேற்பட்டோர் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அவர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.