வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (17/06/2017)

கடைசி தொடர்பு:20:05 (17/06/2017)

ஜெயலலிதா, கருணாநிதி வரிசையில் ஸ்டாலின்... எம்பி கனிமொழி பேச்சு

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே மதுவிலக்கை அமல்படுத்தி கையெழுத்து போட்டிருக்கும் என்றார் தி.மு.க எம்பி கனிமொழி. 

kanimozhi

தி.மு.க மாநில மகளிரணி சார்பில் தஞ்சையில் மார்பகப் புற்றநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் இலவச முகாமினை தி.மு.க எம்.பி கனிமொழி  தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 'கருணாநிதி, ஜெயலலிதா இடத்தைப் பிடிப்பதற்கு ரஜினிக்கு தகுதி உண்டு என்ற திருமாவளவன் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால், தமிழகத்தின் அடுத்த தலைவராகவும், ஆளும்திறன் கொண்ட முதல்வராகவும் ஸ்டாலினைத்தான் மக்கள் விரும்புகிறார்கள், என்று ஊடகங்களிலும் வரும் கருத்துகளைப் பார்த்து மக்களே எதிர்பார்க்கிறார்கள். ஸ்டாலின்தான் அடுத்த முதல்வராக வருவார். அடுத்த முதல்வராக வேறு யார் வருவதையும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தொழில் வளர்ச்சி, மருத்துவம், கல்வி என அனைத்து துறைகளிலும் வடமாநிலங்கள்தான் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். பி.ஜே.பி ஆளும் மாநிலங்கள்கூட எந்தத் துறையிலும் வளர்ச்சி பெறவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் தொழில் வளர்ச்சி, மருத்துவம், கல்வி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியது. வரும்முன் காப்போம் திட்டம் தி.மு.க ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில்தான் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது தி.மு.க ஆட்சியில் இல்லாவிட்டாலும் வரும்முன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணியையும் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில்தான் செயல்படுத்தி வருகிறார்கள். வரும்முன் காப்போம் என்று மக்கள் நினைத்திருந்தால் தமிழகத்தில் இதுபோன்று ஆட்சி நடக்குமா? 

இப்போது பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்திருந்தால் முதல் கையெழுத்தே மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான கையெழுத்தாகத்தான் இருந்திருக்கும் என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க