வெளியிடப்பட்ட நேரம்: 09:03 (18/06/2017)

கடைசி தொடர்பு:08:47 (19/06/2017)

'ஸ்டாலினின் நோக்கம் இதுதான்': சொல்கிறார் ஜெயக்குமார் !

டெல்லியில் இன்று 17- வது ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் லாட்டரி மீதான வரி மற்றும் இணையதள பரிமாற்றத்துக்கான விதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட உள்ளன. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்றுள்ளார்.

Jayakumar


இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம், "மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிறைய சலுகைகள் வழங்கி வருகிறது. இந்த கூட்டத்தில், அவர்களுடைய நலத்தில் அக்கறை கொண்டு எடுத்துரைக்கப்படும்.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கபட்ட அரசை கலைக்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஜனநாயகத்தின் காவலர்கள், நம்பிக்கைக் கொண்டவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஸ்டாலினை பொறுத்தவரை, முதலமைச்சர் கனவு என்பது அவரை தூங்கவிடாமல் செய்கிறது. அவர் தூங்காமல் தவிக்கிறார். அம்மா அரசை கவிழ்க்க வேண்டும், ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என உள்நோக்கத்துடன் ஸ்டாலின் செயல்படுகிறார். அவரது கனவு பலிக்காது. அது பகல் கனவாகதான் முடியும்.


எங்களைப் பொறுத்தவரை, ஓ.பி.எஸ் வர வேண்டும். கதவுகள் திறந்தே உள்ளன. எங்கள் கருத்தை ஏற்று அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.