தொடங்கியது இலங்கை கடற்படையின் மீனவர் சிறை பிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Fishermen

வங்கக் கடலில் ஆண்டு தோறும் மீன்பிடி தடைக்காலம் 45 நாள்களுக்குப் பிறப்பிக்கப்படும். ஆனால், இந்தாண்டு, 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலம், கடந்த 14 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 


இதனிடையே, "எல்லைத்தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை கைது செய்வோம்" என இலங்கைக் கடற்படை அதிகாரிகள் எச்சரித்தனர். இதையடுத்து, பாக்நீரினை கடற்பகுதியில் மீன் பிடித்த சுமார் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், தென்கடலில் மீன்பிடிப்பதற்காக பாம்பன் தூக்குபாலத்தைக் கடந்து வடக்கு கடற்கரையில் இருந்து நேற்று சென்றனர்.


இந்நிலையில், தடை காலத்துக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தடைக் காலம் முடிந்த ஒரு நாளிலேயே மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஏற்கெனவே 11 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 145 படகுகளும் இலங்கைக் கடற்படை வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!