ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா... போலீஸில் புகாரளிக்க அறிவுறுத்தல்! | Election Commission decides to give police complaint over R.K.Nagar election

வெளியிடப்பட்ட நேரம்: 22:54 (18/06/2017)

கடைசி தொடர்பு:10:58 (19/06/2017)

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா... போலீஸில் புகாரளிக்க அறிவுறுத்தல்!

ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாகப் போலீஸில் புகாரளிக்கத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

edappaadi

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், ஆர்.கே.நகர் தேர்தலின் போது, வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் புகாரால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக இன்று தெரியவந்தது. இதையடுத்து பணப்பட்டுவாடா புகார் தொடர்பாகப் போலீஸில் புகாரளிக்கத் தலைமைத் தேர்தல் அதிகாரியை அறிவுறுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.