ஆறுதல் அளித்த ஹர்திக் பாண்டியா புதிய சாதனையும் படைத்தார்!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அதிவேக அரைசதமடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனைப் படைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்திய தொடக்க வீரர்களின் பேட்டிங் லைன், சரிவைச் சந்தித்த நிலையில் பாண்டியா மட்டுமே நம்பிக்கை அளிக்கும் விதத்தில் விளையாடினார். அவர், 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உதவியுடன் 76 ரன்களைக் குவித்தார். அத்துடன், 32 பந்துகளில் அரைசதமடித்தார். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மிக விரைவாக அடிக்கப்பட்ட அரைசதம் இது. 

இதற்குமுன், கடந்த 1999 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 33 பந்துகளில் அரைசதம் விளாசியிருந்தார். அந்தச் சாதனையை நேற்று பாண்டியா முறியடித்தார். இதே ஆட்டத்தில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஸ் 34 பந்துகளில் அரை சதமடித்திருந்தார். தற்போது, பாண்டியா முதலிடத்தைப் பிடித்திருப்பதால், முகமது ஹஃபீஸின் சாதனை 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!