110 விதியின் கீழ் புதிய திட்டங்களை அறிவித்தார் தமிழக முதல்வர்! | TN CM announces new policies over 110

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (19/06/2017)

கடைசி தொடர்பு:14:11 (19/06/2017)

110 விதியின் கீழ் புதிய திட்டங்களை அறிவித்தார் தமிழக முதல்வர்!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 ஆம் விதியின் கீழ் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி

இன்று தமிழக அரசின் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி, 'உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும் என்றும், பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரில் தனிக்கட்டடம் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும் ரூபாய் 39 கோடி செலவில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் எனவும், தலா 10 கணினிகள் வீதம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

மேலும், முதலமைச்சர் 110 ஆம் விதியின் கீழ் அறிவித்த திட்டங்களில். 'புதிதாக 7 அரசுக் கல்லூரிகள், 3 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு, புதிதாக 660 உதவி பேராசியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அவர் அறிவித்தார். நெல்லையில் சர்வதேச தரத்தில் புதிய நீச்சல் குளம், ரேஷன் கடைகளில் ரூபாய் 40 கோடியில் கைரேகை இயந்திரங்கள், 114 கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்த கட்டடம், மாதாவரத்தில் 25 கோடியில் புதிய சேமிப்புக் கிடங்கு, பணியின்போது உயிரிழக்கும் வன ஊழியர்களுக்கு 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை ஆகிய அறிவிப்புகளை 110 ஆம் விதியின் கீழ் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 


[X] Close

[X] Close