Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அரசியல் பேச விரும்பவில்லை' : ரஜினி திட்டவட்டம்!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 'அரசியல்குறித்துப் பேச விரும்பவில்லை' எனக் கூறியுள்ளார்.

ரஜினி

கடந்த மே மாதம், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தனது அரசியல் நிலைப்பாடுகுறித்து சூசகமாகப் பேசினார். இதையடுத்து, ரஜினியின் அரசியல் பிரவேசம்குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பின. விடுதலைச் சிறுத்தைகள், இந்து முன்னணி ஆகிய கட்சிகள் ரஜினியை வெளிப்படையாகவே ஆதரித்துப் பேசிவந்தன. மேலும், பா.ஜ.க-வும் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகக் கூறியிருந்தது.

இதனிடையே இன்று, இந்து மக்கள் கட்சியின் சார்பில் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் ரஜினியைச் சந்தித்தனர். ரஜினி தலைமையில் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, 'அர்ஜுன் சம்பத் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை' எனக் கூறினார். மேலும், எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ விவகாரம் பற்றி கேட்டதற்கு, 'அரசியல் பற்றிப் பேச விரும்பவில்லை' என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement