வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (19/06/2017)

கடைசி தொடர்பு:15:44 (19/06/2017)

மதுரையை அதிரவைத்த வெடிகுண்டு மிரட்டல்! 52 எஸ்பிஐ வங்கிகளில் தீவிர சோதனை

மதுரையில்  எஸ்.பி.ஐ வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 52 வங்கிகளில் வெடிகுண்டு சோதனை நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

sbi

மதுரை மாவட்டத்தில் 52 பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் இயங்கி வருகின்றன. இன்று எஸ்.பி.ஐ வங்கியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வங்கிக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவறிந்த காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து மாநகரம் முழுவதும் உள்ள 52 கிளைகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மதுரையில் வங்கி கிளைகள் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.