Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கார்பன் வெளியீடு' கணக்கீட்டில் மாற்றம் - எதிர்க்கும் சூழலியலாளர்கள் !

ஒரு நாடு, 'குறிப்பிட்ட அளவுக்கான கார்பனைத்தான் வெளியேற்ற வேண்டும்' என்ற சட்டம் உலக நாடுகள் மத்தியில் இருக்கிறது. இதில், கார்பன் வெளியீட்டைக் கணக்கிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என பல ஐரோக்கிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று அந்தச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால், அது மிகப் பெரிய சூழலியல் சீர்கேட்டை உருவாக்கும் என்று சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பொதுவாக, கார்பனைக் கணக்கிடுவது அத்தனை எளிதல்ல. காட்டின் மரங்கள் அதனதன் வயதிற்கேற்ப, அதிகப்படியான கார்பனை உறியவும் செய்யும், சமயங்களில் கார்பனை வெளியிடவும் செய்யும். இன்றைய நிலையில், 1990 - 2009 வரையிலான காலகட்டத்தில், ஐரோப்பிய நாடுகளில், எந்த அளவிற்கான காடுகள் இருந்தனவோ, அதனடிப்படையில்தான் அந்த நாடுகளால் கார்பனை வெளியிட முடியும். ஆனால் ஐரோப்பாவில், கடந்த 10 ஆண்டுகளில் காடுகளின் பரப்பளவு கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே, இந்தப் புதிய வகையிலான கணக்கெடுப்பில், இந்த ஆண்டுகளின் காட்டுப் பரப்பளவையும் கணக்கில் கொண்டு, கார்பன் வெளியீட்டைக் கணக்கிட வேண்டும் என்பது அரசாங்கங்களின் கருத்தாக இருக்கிறது. 

ஆனால், வரும் காலங்களில் ஆஸ்திரியா, பின்லாந்து, போலாந்து, ஸ்வீடன் போன்ற பல நாடுகளும் அதிகப்படியான காடுகளை அழிக்கத் திட்டமிட்டிருக்கின்றன. அதிலிருந்து தப்பிக்கவே, இந்தச் சட்ட மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் உருவாக்கியிருக்கும் மரங்கள் சிறியவை. அவை, கார்பனை அத்தனை வீரியமாக உறிஞ்சும் தன்மைகொண்டவை அல்ல. மாறாக, அவை குறிப்பிட்ட அளவிலான கார்பனை வெளியேற்றும். அதை ஈடு செய்வதுகுறித்துப் பேசாமல், அரசுகள் கணக்குகளில் மேற்கொள்ளும் மாற்றங்கள், பேப்பரில் வேண்டுமானால் மாறலாம், ஆனால், இயற்கைக்கு அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று கொந்தளிக்கிறார்கள் உலகச் சூழலியலாளர்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement