Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்எல்ஏ-க்களுக்கு பேரம்... சட்டப்பேரவைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், சட்டப்பேரவைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுக

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இரு அணிகளாக அ.தி.மு.க உடைந்ததால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆளும்கட்சிக்கு உருவானது. இதையடுத்து, சசிகலா அணி எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அடுத்து, பெரும்பான்மையை நிரூபித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்தது. இந்த நிலையில், கூவத்தூரிலிருந்து தப்பித்து, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வந்த மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன், அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எம்எல்ஏ-க்களுக்கு பேரம் பேசப்பட்டதாகக் கூறினார்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வீடியோ விவகாரம்குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். மேலும், சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதிலளிக்குமாறு சட்டப்பேரவைச் செயலாளர் பூபதிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதுகுறித்து சிபிஐ மற்றும் மத்திய வருவாய் புலணாய்வுத்துறை பதிலளிக்க ஆணையிட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement