Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரைம்ஸில் கூட அப்பா பேப்பர் படிக்க, அம்மா டீ போட வேண்டுமா?! #ChangeTaboo

அம்மா

ரம்பப் பள்ளிக் குழந்தைகளின் பருவம், அவர்கள் வளர்ச்சியில் முக்கியக் காலகட்டம். மழை, வெயில் முதல் வீடு, சமூகம் வரை அதனதன் இயல்பு அவர்களுக்கு அப்போதுதான் வகுப்பறைகள் அறிமுகப்படுத்தப்படும். கற்பித்தல் பாடல்களும், குட்டிக் கதைகளுமே அவர்களின் பாடங்கள். 

அம்மா

சரி, மழலையர் வகுப்பில் குடும்பம் பற்றிக் கற்பிக்கும் ரைம்ஸ்கள், படக்கதைகளின் காட்சிகள் எப்படி இருக்கின்றன? அம்மா சமையல் வேலைகளில் இருப்பார். அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருப்பார். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அம்மா குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவார், தூங்க வைப்பார். அப்பா அலுவலகம் செல்வார். இப்படி வீடு சார்ந்த அத்தனை வேலைகளையும் செய்வது பெண்ணின் பொறுப்பு என்றே சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆண் சுதந்திரம், அதிகாரம் ஆகியவற்றின் பிம்பமாக குழந்தைகள் மனதில் பதியவைக்கப்படுவார். எனில், அந்தக் குழந்தைகள் வளர்ந்துவரும்போது அதே பாலின ஏற்றத்தாழ்வைத்தானே தாங்களும் பிரதிபலிப்பார்கள்? ஆணாதிக்கம் வேரிலேயே ஊட்டப்பட, கல்வியும் துணைபோவது கண்டனத்துக்கு உரியது. நாளைய சமுதாயத்திலாவது பாலின சமத்துவம் சாத்தியப்பட, இன்றைய மழலைகளுக்கு அறிவு மலரத் தொடங்கும் ஆரம்ப நாட்களிலேயே ஆண், பெண் சமம் என்பதை வலியுறுத்தும் ரைம்ஸ்களையும், கதைகளையும், படக்கதைகளையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. அதைச் செய்திருக்கிறார், டெல்லியில் வசிக்கும் பெண்ணியச் செயற்பாட்டாளர் கமலா பாஸின் (Kamala Bhasin).

சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வலம் வந்த ரைம்ஸ் அது. தன் உள்ளடக்கத்தால் பல பெற்றோரையும் சிந்திக்க வைத்தது. 'வீட்டு வேலை என்பது வீட்டில் ஒவ்வொருவரின் வேலை - (House Work is Everyone's Work)' என்ற தன் புத்தகத்தில் கமல பாஸின் எழுதிய ரைம்ஸ் அது. 

1980களில், தன் குழந்தைகளுக்கான நர்சரி ரைம்ஸ் புத்தகங்கள் வாங்கச் சென்ற கமலா பாஸினுக்கு, 'அப்பா அலுவலகம் சென்றார், அம்மா வீட்டு வேலைகள் செய்தார், அண்ணன் தன் தங்கையை வீட்டில் அம்மா கமலா பாஸின்விட்டுவிட்டு நண்பர்களுடன் சாகச விளையாட்டுகள் விளையாடச் சென்றான்' என்றவாறே அனைத்து ரைம்ஸ்களும் இருந்தது அதிர்ச்சியளித்தது. அப்போது கமலா பாஸின் பரபரப்பான வொர்க்கிங் மாம். அவர் கணவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்துக்கொண்டிருந்தார். எனவே, அவர் தனது வீட்டுச் சூழலில் இருந்தே, வீட்டில் ஆண், பெண் பொறுப்புகளை மாற்றிச் சொல்லும் ரைம்ஸ்களை எழுதினார். இந்தியில் அவர் எழுதிய ரைம்ஸ், தொடர்ந்து ஐந்து மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டன. 

இப்படிச் செல்கிறது கமலா பாஸினின் ரைம் ஒன்று. விடுமுறை நாளன்று அப்பாவும் அம்மாவும் வீட்டில் இருக்கிறார்கள். எந்தத் திட்டமும் இல்லை. எந்த விதிமுறையும் இல்லை. அப்பா சூடாக டீ தயாரிக்க, அம்மா செய்தித்தாள் படிக்கிறார், நாட்டு நடப்புகள் பற்றிய தன் பார்வைகளைச் சொல்லியபடி தொடர்ந்து வாசிக்கிறார். 
It’s Sunday, it’s Sunday
Holiday and fun day.
No mad rush to get to school
No timetable, no strict rule.
Mother’s home and so is the father
All of us are here together.
Father’s like a busy bee
Making us cups of hot tea.
Mother sits and reads the news
Now and then she gives her views.
It’s Sunday, it’s Sunday
Holiday and fun day.
அப்பா வீட்டு வேலைகளைச் செய்வதைச் சொல்லும் வரிகள். அம்மா உலக நடப்புகளை விவாதிக்கும் அறிவுடையவள் என்று சொல்லும் வரிகள். இதுதான்... இப்படியான அறிமுகம்தான் கொடுக்கப்பட வேண்டும் குழந்தைக்கு குடும்ப அமைப்பைப் பற்றி. 

இன்னொரு பாடல் இது. 'அம்மா துணிகளுக்கு சோப்பு போடுகிறார், அப்பா துணியை அலசுகிறார், நானும் நீயும் காய வைப்போம்' என்று பாடுகிறார்கள் குழந்தைகள். 
The clouds are gone – it’s sunshine weather
Let’s wash clothes along with mother
Mother will soap them
Father will wring them
And you and I
Will hang them to dry
When they’re dry and ironed crisp
Let’s dress quickly for a trip.

இப்படி இவரின் ரைம்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு ஆண், பெண் பாகுபாடற்ற வீட்டை, உலகை அறிமுகப்படுத்துவதாக இருக்கின்றன. இந்த ரைம்ஸ்கள் இப்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் கமலா பாஸின் எழுதிய ரைம்ஸ் இன்றும் புரட்சியாகப் பார்க்கப்படும், அவசியத் தேவையாக இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம். 'குழந்தைகளாக இருக்கும்போதே பாலின சமத்துவம் பற்றிக் கற்றுத் தராமல் வளர்ந்த பின் பெண்களைச் சமமாக நடத்த வேண்டும் என்று கூக்குரலிடுவது அபத்தம்' என்கிறார் கமலா பாஸின்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement