ஜூன் 21 அன்று வருகிறது, ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர்!

ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் பொறுத்தவரை, எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென புதிய தயாரிப்புகளைக் களமிறக்குவதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். தற்போது அந்த வித்தையைக் கையில் எடுத்திருக்கிறது, ஹோண்டா. நாளை மறுநாள், அதாவது ஜூன் 21, 2017 அன்று, ஒரு புதிய ஸ்கூட்டரை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தப்போவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

 

ஆக்டிவா

 

அந்த ஸ்கூட்டரைப் பற்றிய விவரங்களோ, ஸ்பை ஃபோட்டோக்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை; ஆனால் அது, ஆக்டிவாவைப் போலவே, 110-125 சிசி-யில் ஒரு கம்ப்யூட்டர் வகை ஸ்கூட்டராக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே, அதிகாரபூர்வமான தகவல்களுக்காக, ஜூன் 21, 2017 வரை காத்திருப்போம் மக்களே.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!