Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செல்லப் பிள்ளை யார் தெரியுமா?

முதல்வர்

லைமைச் செயலகத்தின் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாயின் செல்லப்பிள்ளை யார் என்றால்... 'ரோம்தாஸ்' ! தினமும் மூன்று முறையாவது முதல்வர், ரோம்தாஸ் பற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ஆர்வமாக கேட்கிறார். அவரின் செயலாளர்கள், 'தமிழகத்தில் உள்ள 62 ஆயிரம் கி.மீ ரோட்டில் இதுவரை எவ்வளவு தூரம் ரோம்தாஸ் போயிருக்கிறது?' என்று விசாரிக்கிறார்கள். 
நமக்கு ஒன்றும் புரியவில்லை!

அங்கிருந்த அதிகாரியிடம், 'ரோம்தாஸ்னா....பா.ம.க. நிறுவனர் ராம்தாஸா?' என்று கேட்டோம்! 
அவர் நம்மை முறைத்துவிட்டு, 'அந்த தலைவருக்கும் இந்த ரோம்தாஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது, அறிவியல் பூர்வமாக சாலைகளை மேம்படுத்தும் தகவல் சேகரிப்பு உபகரணம். அதன் பெயர்தான் ரோம்தாஸ்' என்றார். 
'அதென்னா..புதுப்பெயராக இருக்கிறதே?' என்கிறீர்களா?

சாலை தள மேற்பரப்பு தகவல்களை திரடட பயன்படும் வாகனத்துடன் பொருத்தப்பட்ட நவீன கருவிதான் அது! 27.1.2012-ம் வருடம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எடப்பாடியார் இருந்தபோது, ஒண்ணரை கோடி ரூபாய் செலவில் இரண்டு கருவிகளை வாங்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் இந்த ரோம்தாஸை ஒடவிட்டு... அதன் ஜாதகங்களை சேகரிப்பதுதான் இதன் பணி. அந்தவகையில், தமிழகத்தில் உள்ள 62 ஆயிரம் கி.மீ. ரோட்டில் பவனி வருகிறது ரோம்தாஸ். இந்தக் கருவியில் லேசருடன் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் சாலையின் தரம் பற்றிய தகவல்களை சேகரிக்க உதவுகிறது. 

ஒரு சாலையில் ரோம்தாஸ் சென்றால்....ரோடு சமதளமாக இருக்கிறதா? எவ்வளவு அடர்த்தியில் ரோடு போட வேண்டும்? ரோட்டுக்கு ரோம்தாஸ் கீழே உள்ள மண்ணின் தன்மை... இப்படி பல டெக்னிக்கல் சமாச்சாரங்களை கம்யூட்டரில் பதிவு செய்யும். பிறகு, அதை கேட்கும்போது ரிப்போர்ட்டாக தரும். இதை வைத்துக்கொண்டு டெண்டர்விடும் கன்டிஷன்களை நெடுஞ்சாலைத்துறை போடமுடியும். தார்சாலை போட்ட பிறகு, இந்த கருவியை ஒடவிடும்போது, அதன் தரம், அடர்த்தி...போன்றவற்றை தெளிவாக சொல்லிவிடும்  

க்யூவில் நின்ற ஒருவர்: 

அண்மையில் ஒரு நாள் தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்திருந்தவர்களை சந்தித்தார்.

"ஏற்காடு தொகுதியில் உள்ள கல்வராயன் மலையிலிருந்து தண்ணீர் கரியகோவில் நீர்தேக்கம் வரை வருவதை சுட்டிக்காட்டி, இடையில் நீர்வழிப்பாதையை கால்வாய் படுகைப்போல அமைத்தால், தண்ணீர் வீணாகாது. சுற்றுப்புற மக்களின் விளை நிலங்களுக்கு பயன் தரும்" என்று சொல்ல...அதற்கு முதல்வர், " நீங்க சொல்ற பிரச்னை பற்றி ஏற்கனவே ஆக்ஷன் எடுத்துட்டோம். வனத்துறைக்கு சொந்தமான காடு வழியாக கால்வாய் வருகிறது. அவர்களிடமிருந்து முறைப்படி பரிமிஷன் வரவேண்டியதுதான் பாக்கி. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் " என்று விளக்கு சொன்னார். வந்தவர்களும் சரிங்க என்று சொன்னார்கள். 

அடுத்து, பத்திரிக்கை நிருபர்கள் பக்கம் திரும்பினார். அங்கிருந்த நாம், சென்னை வாசிகளாகிய நாங்கள் குறைகளை சொல்லலாமா? என்று கேட்க...

முதல்வரும் தலையாட்ட... " உங்களுக்கு நேரம் இருந்தால், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு விசிட் செல்லுங்கள். தினமும் பல்லாயிரம் பேர் ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வருகிறார்கள். எதிர்பக்க ரோட்டை தாண்ட படாதபாடு படுகிறார்கள். வாகனங்களில் சிக்கி காயம் அடைகிறார்கள். முன்பு, உயர்நிலை பாலம் ஒன்று இருந்தது. அங்குள்ள கடைகாரர்கள் 'கவனிப்பில்' சந்தடியில்லாமல் அதை அகற்றிவிட்டார்கள் அதிகாரிகள். நீங்களாவது ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும்?" என்றோம். 

" உயர் நிலை பாலம் உடனே அமைக்க முடியும். ஆனால், ரயில்வே துறை ஒத்துழைக்கவேண்டுமே?" என்றார்.

"தற்போது தென்னக ரயில்வேயின் தலைமை கமர்சியல் மேனேஜராக இருப்பவர் பிரியம்வதாவிஸ்வநாதன் மேடம். அவரிடம் இதே பிரச்னையை நாங்கள் கொண்டுபோனபோது, 'ரயில்வே எப்போதும் ரெடி. மாநகராட்சி பிளாட்பாரத்தில் பாலம் அமைக்க இடம் ஒதுக்கவேண்டுமே?' என்றார். ஆக, ரயில்வேயும் ரெடி. நீங்கள் நடவடிக்கை எடுத்தால், மாநகராட்சியும் ஒ.கே. சொல்லிவிடும். சென்னை மக்களின் நீண்ட நாளைய பிரச்னை தீரும்" என்றோம்.

உடனே, தனது பி.ஏ-வை கூப்பிட்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு லைன் போட்டு பேசினார். பின்னர்,
நிச்சியமாக பாலம் அமையும் என்கிற உத்திரவாதம் கொடுத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement