வெளியிடப்பட்ட நேரம்: 01:56 (20/06/2017)

கடைசி தொடர்பு:11:36 (20/06/2017)

மனைவியின் கல்யாணத்திற்கு வந்த கணவன்! 10 பேரை ஏமாற்றிய பலே பெண்மணி

'பணம் பத்தும் செய்யும் என்பார்கள். கேரளாவில் ஒரு பெண் பணத்துக்காகப் பத்துத் திருமணங்கள் செய்திருக்கிறார். ஆம் பணம் நகைக்காக இதுவரை 10 பேருக்குக் கழுத்தையும் நீட்டி பின்பு கம்பியும் நீட்டியிருக்கிறார். பத்தாவது கல்யாணத்திற்கு எதிர்பாராதவிதமாக அவரது கணவர்களில் ஒருவர் வந்தபின் இந்தக் குட்டு வெளியாகியது.

 threadகேரள தினசரி ஒன்றில் வெளியான மணமகள் தேவை விளம்பரத்தில் 'கணவனை இழந்த இளம்விதவைக்கு மணமகன் தேவை' என குறிப்பிட்டிருந்தது. பெண்ணின் படமும் செல்போன் எண்ணும் தரப்பட்டிருந்தது. இளைஞர் ஒருவர் விளம்பரம் தந்திருந்த ஷாலினி என்ற பெண்மணியைத் தொடர்பு கொண்டார். ஷாலினியின் பேச்சில் மயங்கிய இளைஞர், கணவனை இழந்த தான் பெங்களுருவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் என்றும் விரைவில் கேரள நீதிமன்றத்தில் வேலை கிடைக்கப் போவதாகவும், அவர் கூறியதை நம்பினார்.

ஷாலினிஅப்போது தனக்கு உறவு என்று யாருமில்லை எனக்கூறி கண்ணீ்ர் சிந்திய ஷாலினி, கல்யாண நாளையும் குறிக்க வைத்தார். திருமணத்தில் மணமகன் வீட்டார் மட்டும் பங்கேற்றனர். அப்போது திருமணத்திற்கு வந்த ஒருவருக்கு ஏதோ பொறி தட்ட, உடனே தன் நண்பருக்குப் போன் செய்து வரவழைத்தார்.

வந்தவர் வேறு யாருமல்ல.. ஷாலினியின் கணவர். விஷயம்காவல்துறைக்குச் சென்றது. அவர்கள் ஷாலினியை விசாரித்தபோது இன்னும் பல அதிர்ச்சிகள் வெளியாகின. ஷாலினி இதுபோன்று மணமகன் தேவை விளம்பரங்கள் மூலம் இதுவரை 9 திருமணங்களைச் செய்த விவரம் தெரியவந்தது. 

விளம்பரத்தின் மூலம் இளைஞர்களை மயக்கி திருமணம் செய்துகொண்டு அன்றிரவே பணம் நகைகளுடன் எஸ்கேப் ஆகிவிடுவது ஷாலினியின் வழக்கமாம். கடந்த 2014 ம் ஆண்டு நாயர் என்பவரை ஏமாற்றித் திருமணம் செய்த ஷாலினி தமிழகத்தில் பழனிக்குத் தப்பிவந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பழனிக்கு வந்து போலீஸார் ஷாலினியைக் கைது செய்தனர்.

கேரளாவில் 5 இடங்களில் அவர் மீது திருமண மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சொகுசாக வாழ ஆசைப்பட்ட ஷாலினி இப்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க