Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டாலின், திருமா, சீமானை விளாசிய ஹெச்.ராஜா!

'மாேடி, மக்களாேட அக்கவுன்ட்டில் பணம் பாேடுறதா சாெல்லலை. அப்படி அவர் சாென்னதா யாரும் நிரூபிச்சா, நான் அரசியலைவிட்டே பாேயிடுறேன். நிரூபிக்க முடியலைனா, நீங்க மீடியா வேலையை விட்டுட்டுப் பாேகத் தயாரா?' என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கரூரில் பேசியுள்ளார்.

raja

பிஎஸ்என்எல் திருச்சி மண்டலம் சார்பாக, கரூர் காெங்கு திருமண மண்டபத்தில், 'இணைவாேம்...அனைவரும் வளர்வாேம்' என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக வந்த ஹெச்.ராஜாதான், பத்திரிகையாளர்களிடம் மேற்படி அதிர்ச்சி அணுகுண்டு சவாலை விடுத்தார். இந்தக் கருத்தரங்க விழா அழைப்பிதழில் சிறப்பு அழைப்பாளராக,கரூர் தாெகுதி எம்பி-யும், மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை கலந்துகாெள்ள இருப்பதாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால்,ஹெச்.ராஜா பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், கடைசி நேரத்தில் தம்பிதுரை டிமிக்கி காெடுக்க,ஹெச்.ராஜா கலந்துகாெண்டார். அந்தக் கருத்தரங்கம் நடப்பதற்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா...

'மோடி அடிச்சா அது எல்லாமே சிக்ஸர்தான். கடந்த மூன்றாண்டு மோடி சாதனைகள் பொன்னேட்டில் பொறிக்கத்தக்கவை. இவர் ஆட்சிக்கு வந்தபிறகு, இந்தியப் பாெருளாதாரம் எங்கேயாே உயர்ந்திருக்கு. 28 கோடியே, 60 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கேஸ் மானியத்தில் 14,600 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களைப் பிரதமர் படம் இல்லாமல் செயல்படுத்தினால், அந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவோம். தமிழ்நாடு அரசு கழிவறையில்கூட காசு திருடுகிறது. தமிழகம் முழுவதையும் பாலைவனமாக்கிய திராவிடக் கட்சிகளின் அஸ்தமனத்தில்தான் தமிழர்களின் விடிவு காலம் உள்ளது. 

தமிழகத்திலிருந்து மணல் கடத்தி கேரளாவுக்கு அனுப்பப்பட்டு, அது வெளிநாடுகளுக்கு உலர் மணலாக அனுப்பப்படுகிறது. திருமாவளவன், சீமான் போன்றவர்கள் மனரீதியில் சரியாக உள்ளார்களா எனத் தெரியவில்லை. அவர்களுக்கு பிரதமரை விமர்சிக்க எள்ளளவும் தகுதியில்லை. உண்மைக்குப் புறம்பாக பிரதமரை விமர்சித்துப் பேசும் திருமாவளவனை வன்மையாகக் கண்டிக்கிறோம். மன்மோகன்சிங்,சிதம்பரம் போன்றவர்கள்தான் பொருளாதாரத்தைச் சீர்குலைத்தவர்கள்.

3,600 அனுமதிபெற்ற மாடு வெட்டும் நிலையங்களுக்கு மாடுகளை விற்பதற்குத் தடையில்லை.பஞ்சதந்திரக் கதையில் வரும் நரி போல ஸ்டாலின் உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில்தான் அமையும். தமிழக அரசுதான் அதற்கு இன்னும் இடம் ஒதுக்கித் தரவில்லை. பிரதமர், ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் காேவிந்தை அறிவித்திருக்கிறார். பிரதமர் அறிவித்த வேட்பாளர் சரியான நபராகத்தான் இருப்பார். அப்புறம், இன்னைக்குப் பாெதுவுடமை, கம்யூனிஸம்னு அதிகம் பேசுறாங்க. அப்படி கம்யூனிஸத்தை அதிகம் பேசிய ரஷ்யாவில்தான் பஞ்சம் அதிகம் ஏற்பட்டுச்சு. மாேடி, இந்தியப் பாெருளாதாரத்தை உயர்த்துறதுக்கு கறுப்புப் பணத்தை முற்றிலும் ஒழிச்சுட்டார். அதனால், தனிமனித வருமானம் உயர்ந்திருக்கு. சாென்னபடி பாெருளாதார நிலைமையைச் சீராக்கி இருக்கார். ஆனால், சிலர் சாெல்வதுபாேல மக்கள் அக்கவுன்ட்டில் 15 லட்சம் பணம் பாேடுறதா எங்கேயும் எப்பாேதும் மோடி சாெல்லலை. அப்படிச் சாென்னதா நிரூபிச்சா, நான் அரசியலை விட்டே பாேயிடுறேன். அப்படி நிரூபிக்க முடியலைனா, நீங்க மீடியா வேலையை விட்டே பாேகத் தயாரா?', என்று பத்திரிகையாளர்களைச் சவாலுக்கு இழுத்து அதிர்ச்சியளித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement