Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பஞ்சாபில் எல்கேஜி முதல் பிஹெச்.டி வரை பெண்களுக்குக் கட்டணமில்லாக் கல்வி

'எல்கேஜி முதல் பிஹெச்.டி  வரை மாணவிகளுக்குக் கட்டணமில்லாத கல்வி வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார், பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங். இதைப் போலவே, பஞ்சாயத்துத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகித அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சட்டசபையில் அறிவித்திருக்கிறார். பெண்கள் முன்னேற்றம்குறித்து பல கோரிக்கைகளைத் தனது தேர்தல் வாக்குறுதியாக அமரீந்தர் சிங் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாப்

'பஞ்சாபில் உள்ள 13,000 பள்ளிகளிலும் 48 அரசுக் கல்லூரிகளிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். ஐந்து கல்லூரிகள் புதிதாகத் திறக்கப்படும். மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், ஆங்கில வகுப்புகள் புதிதாக ஆரம்பிக்கப்படும்' என்றும் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். 

 நலிந்தோர்க்கு எளிதாகக் கடன், வீடு இல்லாதவர்களுக்கு வீடு, குறைந்த வட்டியில் வங்கிக் கடன், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்களைத் தெரிவிக்கும் வகையில் லோக்பால் மசோதா என்று பல சமூக நலத் திட்டங்கள்குறித்த அறிவிப்புகளைச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவித்துவருகிறார் அமரீந்தர் சிங். 

இவரின் அறிவிப்புகளில் மிக முக்கியமானது, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான விவசாய பயிர்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்பதுதான். இதில், சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய இரண்டு லட்ச ரூபாய் வரையிலான கடன்கள் முழுமையாகத் தள்ளுபடிசெய்யப்படும் என்றும், இதர விவசாயிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் அமரீந்தர் சிங்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement