ஈஷா யோகா மைய கட்டடங்களுக்குச் சிறப்பு அனுமதி! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கோவை ஈஷா யோகா மையக் கட்டடங்களுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Isha Yoga

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தின்மீது பல்வேறு புகார்கள் உள்ளன. குறிப்பாக, கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கு 112 அடி ஆதி யோகி சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள ராஜவாய்க்கால் கால்வாயை ஆக்கிரமித்து ஆதி யோகி சிலை கட்டப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது.  தமிழக அரசு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பதிலளித்துள்ளார். அதில், "ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புகார்குறித்து ஈஷா யோக மையத்தில் ஆய்வுசெய்யப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கட்டடங்களுக்கு விதிகளைத் தளர்த்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தடையில்லாச் சான்று அளித்ததால், மலைதளக் குழு சிறப்பு அனுமதி அளித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!