ஜிஎஸ்டி விளம்பரத் தூதராக அமிதாப் பச்சன்!

ஒரே நாடு, ஒரே வரி என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு, ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், அதுகுறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் தூதரா க, அமிதாப் பச்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை, மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி வாரியம் நியமித்துள்ளது. 

அமிதாப்

இதற்காக, 40 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ காட்சி ஒன்றில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். அந்த வீடியோ, தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாம். தொலைக்காட்சிகளில், திரையரங்கங்களில் இந்த வீடியோ ஒளிபரப்பப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் ஜிஎஸ்டிகுறித்த தகவல்களை மக்களுக்குப் பரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர், ஜிஎஸ்டி விளம்பரத் தூதராக பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து இருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!