வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (20/06/2017)

கடைசி தொடர்பு:15:15 (20/06/2017)

ஆள்பிடித்து ஆட்சி அமைக்கின்ற ஆட்கள் தி.மு.க.காரர்கள் அல்ல! தஞ்சையில் பொங்கிய திருச்சி சிவா

எம்எல்ஏ-க்களை பிடித்து ஆட்சியைக் கலைத்து ஆட்சி அமைக்கின்ற கூட்டம் திமுக அல்ல என்று திருச்சி எம்பி சிவா கூறினார்.

தஞ்சையில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் வைரவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய சிவா, குடியரசுத் தலைவர், பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் தலைவர் கருணாநிதி இருந்தார் என்பதுதான் திமுகவின் வரலாறு. தேசிய அரசியலுக்கு வரவேண்டும் என்று தலைவரை எதிர்பார்த்தார்கள். ஏனென்றால் தலைவரின் உழைப்பால் இந்தியாவில் மிகப்பெரிய திட்டங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். மிசா காலத்தில் மாநிலக் கட்சிகளைத் தடைசெய்துவிடுவார்கள் என்று வதந்தியைப் பரப்பினார்கள். ஆனால் அது உண்மையல்ல. அப்போதுதான் அண்ணா திமுக என்று இருந்த கட்சியைத் தன்னுடைய கட்சியின் பெயரை ஒட்டு சேர்த்ததுதான் அனைத்து இந்திய அண்ணா திமுக கட்சி என்று மாற்றி வைத்துக்கொண்டார்கள். கட்சி தடைசெய்யப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அப்படி செய்தார்கள் அதிமுகவினர். இன்னும் சிலர் தமிழகத்தைக் காட்டிக் கொடுத்தப் பிரதமராக உருவாக வேண்டுமென நினைத்தார்கள்.

என்னிடம் சிலர், உங்களுக்குத் தெரிந்த 10 எம்எல்ஏக்களைப் பிடித்து இழுத்து ஆட்சி அமைக்க வேண்டியதுதானே என்று கேட்டார்கள். ஆட்களைப் பிடித்து இழுத்து ஆட்சி அமைக்கின்றவன் திமுககாரன் அல்ல என்று சொன்னேன். ஏனென்றால், மக்களைச் சந்தித்துத் தேர்தல் களத்தில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பவன்தான் திமுககாரன். இடையில் பிடுங்கி ஆட்சி அமைப்பவன் அல்ல. அது ஜனநாயகம் அல்ல. ஆட்சியைத் தீர்மானிப்பது ஒரு தனிப்பட்ட கட்சியோ, அதிகாரமோ அல்ல, மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆகையால்தான் அப்படி சொன்னேன். இப்போது பார்த்தீர்களா, தமிழகத்தில் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. அதைத்தான் 2016ல் நாங்கள் உங்களிடம் வந்து தலைவர் கருணாநிதியும், தளபதியும் வந்து வீடு வீடாகக் கெஞ்சினோம். இப்போது புரிந்ததா, புரிந்தால் புரிந்து வைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் அதைத் தீர்ப்பதற்கான நேரம் வரும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க