Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலையில் தம்பிதுரை... பிற்பகலில் தினகரன்..! அடுத்தடுத்து சசிகலாவுடன் சந்திப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவை, தினகரன் மீண்டும் சந்தித்துள்ளார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் சந்திப்பைத் தொடர்ந்து, தினகரனின் சந்திப்பு நடந்துள்ளது.

 

இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி தினகரன், கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியேவந்தார். சிறை செல்வதற்கு முன், கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லியவர், சிறையிலிருந்து வெளிவந்தவுடன், கட்சிப் பணிகளைக் கவனிப்பேன் என்றார். இதனால், அ.தி.மு.க-வில் குழப்பம் அதிகரித்தது.

இந்த நிலையில், திகார் சிறையிலிருந்து வெளியேவந்த தினகரன், சசிகலாவைச் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். சமீபத்தில், கூவத்தூர் பணப்பட்டுவாடா தொடர்பான சிடி வெளியானபோது, சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் தன் மனைவி அனுராதா, மருத்துவர் வெங்கடேஷுடன் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு தினகரன் சென்றார்.

இன்று காலை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்துத் திரும்பியவுடன், தினகரனுடனான சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement