சத்தியமா அமைச்சர்தான்... நம்புங்க! 

சில அரசியல் கட்சித் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி, மீடியாக்களில் செய்தி வெளியிட்டு விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். எளிமையானவர்களாக காட்டிக் கொள்ள, இதுபோன்ற சித்து வேலைகளில் அவர்கள் ஈடுபடுவார்கள். கேரள மக்கள்,  தாங்கள் ஆடம்பரத்தில் திளைத்தாலும் தலைவர்கள் எளிமையானவர்களாக இருக்க வேண்டுமென நினைப்பார்கள். 

கேரள துறைமுகத்துறை அமைச்சராக இருப்பவர் கட்னாப்பள்ளி ராமச்சந்திரன். திருச்சூர் அருகே, கொடுங்கல்லூர் பகுதியில் மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புஷ்பா ஸ்ரீநிவாசன் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை சந்தித்து, உடல்நலம் விசாரிக்க வந்த ராமச்சந்திரன், அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு தனியாகச் சென்றார். பாதுகாப்புக்காக உடன் ஒரு போலீஸ்கூட இல்லை.

ஹோட்டலில்  மசால் தோசையும் டீயும் சாப்பிட்டுவிட்டு பில் கொடுத்தார். அப்போதுதான், ஹோட்டலில் இருந்த சில வாடிக்கையாளர்களுக்கு அமைச்சரை அடையாளம் தெரிந்திருக்கிறது. சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, கொடுங்கல்லூர் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குச் சென்று தொண்டர்களைச் சந்தித்தார்.

அண்மையில் , கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ கீதா கோபியின் மகள் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்ததாக சர்ச்சை எழுந்தது. அதே மாநிலத்தில்தான் ராமச்சந்திரன் போன்ற எளிய அமைச்சர்களும் இருக்கிறார்கள்.
 

PHOTO COURTESY: MATHRUBHUMI

Do you like the story?

Please Appreciate the Author by clapping!