Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலாவைச் சந்தித்த அந்த ஐந்து எம்எல்ஏ-க்கள்!

இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன், கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியேவந்தார். சிறை செல்வதற்கு முன், கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லியவர், சிறையிலிருந்து வெளிவந்தவுடன், கட்சிப் பணிகளைக் கவனிப்பேன் என்றார். இதனால், அ.தி.மு.க.வில் குழப்பம் அதிகரித்தது.

Sasikala


ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று அ.தி.மு.க இரண்டு அணிகளாகத் தனித்து செயல்பட்டு வரும் நேரத்தில், டி.டி.வி.தினகரன் அணி உருவானது. இதையடுத்து, அமைச்சர்கள் யாரும் டி.டி.வி.தினகரனை சந்திக்க மாட்டோம் என்று ஜெயக்குமார் கூறிய நிலையில், 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தினகரனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு அதிகரித்தது.

இதனிடையே, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவை, தினகரன் இன்று சந்தித்துள்ளார். திகார் சிறையிலிருந்து வெளியேவந்த தினகரன், சசிகலாவைச் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை இன்று காலை சசிகலாவைச் சந்தித்தார். தற்போது ஐந்து எம்எல்ஏ-க்கள் சசிகலாவைச் சந்தித்துள்ளனர். செந்தில் பாலாஜி, பழனியப்பன், கென்னடி, முருகன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் சசிகலாவைச் சந்தித்துள்ளது பழனிசாமி அணியினரை அதிரவைத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement