Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முழுமையாக இடிக்கப்பட்டது சென்னை சில்க்ஸ் கட்டடம்!

தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டது.

சென்னை சில்க்ஸ்

சென்னை தியாகராய நகரிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த மே 31 அன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடத்தின் 7 தளங்களும் சேதமடைந்தன. தீயை அணைக்கும் வேலை 2 நாள்கள் நடைபெற்ற பின்னர், கட்டடத்தை இடிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ராட்சத ஜா கட்டர் இயந்திரம் மூலம் கட்டட இடிப்புப் பணிகள் தொடங்கின.

இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டடம் தற்போது முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. கட்டடம் இடிக்கப்படும்போது அருகிலுள்ள கட்டடங்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இடிபாடுகளை அகற்றும் பணி நாளை முதல் தொடங்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இடிப்புப் பணியின்போது திருவண்ணாமலையைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் பலியானது குறிப்பிடத்தக்கது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement