வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (20/06/2017)

கடைசி தொடர்பு:10:49 (21/06/2017)

இந்தியாவில் தஞ்சம் அடையவிருக்கும் அகதிகள் எண்ணிக்கை தெரியுமா? #Worldrefugeeday

அகதிகள்

போர், இயற்கைச் சீற்றம், கலவரம், வன்முறை போன்ற காரணங்களால் தங்கள் சொந்த ஊர்களில் வாழ முடியாதவர்கள், மற்ற ஊர்களுக்கோ, நாடுகளுக்கோ தஞ்சம் அடைகிறார்கள். இவர்களைத்தான் அகதிகள் என்கிறோம். சிரியா போன்ற நாடுகளில் தொடர்ந்து போர் நடப்பதால், அந்நாட்டு மக்கள் மற்ற நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இலங்கையில் ஈழத் தமிழர் மீதான தாக்குதலால், அவர்களும்  இந்தியாவுக்கு அகதிகளாக குடிப்பெயர்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும் 32,000-க்கும் மேற்பட்டோர் வேறு நாடுகளிலிருந்து தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், இவர்களில், 26,500 பேர் அகதிகளாகவும் , 5,700 பேர் தஞ்சம் கேட்டும் விண்ணப்பித்துள்ளனர். 

இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலும் அகதிகள் படும் துயரம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. தாங்கள் விரும்பும் வாழ்க்கை அமையாவிட்டாலும், ஒருவித பாதுகாப்புக்காகவும், தங்கள் குடும்ப ஆதரவுக்காகவும் அரை வயிற்றுக் கஞ்சி கிடைத்தாலும் போதும் என்று குடிபெயரும் மக்களின் துயரம் தீர வேண்டும்.

எனவே, அரசு இவர்களுக்குக் குடியுரிமை மற்றும் வேலைவாய்ப்பளிக்க முன்வர வேண்டும். அகதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் தகர்க்கப்பட வேண்டும். தங்களது உற்றார் உறவினர் இறந்தாலும் கேட்பதற்கு நாதி அற்றோராய் கலங்கி நிற்கும் அகதிகள்  துயரம் தீர இந்த அகதிகள் தினத்தன்று வழிவகுப்போமாக. 

 - சா.காயத்ரி