Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''எனக்கு கல்யாணமே வேண்டாம்!'' 'தாமரை' சீரியல் ஷில்பா

ஷில்பா

 

வீஜே'வாக அறிமுகமாகி, பிறகு சீரியல்களில் நுழைந்து இருபது வருடங்களுக்கும் மேலாக இன்றளவும் இளம் நடிகையாக வலம் வரும் சின்னத்திரை நடிகை ஷில்பாவை ஒரு தேநீர் இடைவேளையில் சந்தித்துப் பேசினோம்..

மீடியா ஆர்வம் எப்படி வந்துச்சு..?
``சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமா மேல ஒரு ஆர்வம் இருந்துச்சு. வீட்டுல உள்ளவங்களும் என்னை ஊக்கப்படுத்திட்டே இருந்தாங்க. ஒரு சேனல்ல `வீஜே' ஆடிஷனுக்குப் போனேன். அங்கே இருந்துதான் மீடியாவுல என்னோட பயணம் ஆரம்பிச்சது. என்னோட அக்காதான் எனக்கு இன்னொரு அம்மா. அக்கா என்ன சொல்றங்களோ அதைத்தான் நான் எப்பவும் பண்ணுவேன்.''

சின்னத்திரை ஷில்பாநெகட்டிவ் ரோல் அதிகமா பண்றீங்களே... நிஜத்துல நீங்க எப்படி..?
``நிஜத்துல நான் ரொம்பவே அமைதியான பொண்ணு. வில்லி மாதிரில்லாம் நடந்துக்க மாட்டேன்.  நான் ஆரம்பத்துல நிறைய பாசிட்டிவ் ரோல் பண்ணிருக்கேன். `நிம்மதி' சீரியல்ல நெகட்டிவ் ரோல் பண்ணினேன். அந்த சீரியல் எனக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்துச்சு. அந்த சீரியலுக்காக நான் கண்ணுல கலர் லென்ஸ்லாம் பயன்படுத்தினேன். நெகட்டிவ் ரோல்லதான் நம்மளோட நடிப்பை வெளிக்காட்ட முடியும்னு தோணுச்சு.''

அப்பாவுடன் ஷில்பா


உங்களுக்கு ஆண்கள் மேல நம்பிக்கை கிடையாதாமே..?
``எங்க அப்பாவைத் தவிர நான் எந்த ஆணையும் நம்புறது இல்ல. எங்க அப்பா ரொம்ப நேர்மையானவர். அவரை மாதிரியே நானும் என்னோட அக்காவும் நேர்மையானவங்க. ஒரு சின்ன விஷயத்துக்காகக்கூட இதுவரை நான் யார்கிட்டேயும் பொய் சொன்னது இல்ல. எனக்கு வரப்போகிற புருஷன் எங்க அப்பா மாதிரி இருக்கணும். ஆனா, நானும் சரி... என்னோட அக்காவும் சரி... இதுவரைக்கும் அப்படி ஒரு ஆணை பாக்கல. அதனாலத்தான் நாங்க ரெண்டு பேரும் திருமணம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். கல்யாணம் பண்ணிட்டு பிடிக்கலைன்னு விவாகரத்து பண்றதுக்கு என் அப்பாவோட மகளாவே இருக்குறது எனக்குப் பிடிச்சிருக்கு.''

லவ் புரொபசல் வந்துருக்கா..?
``அதுக்கு என்ன பஞ்சம்... நிறைய வந்துருக்கு! பாதி பேர் போன் பண்ணும்போது என்னோட அக்காதான் போன் எடுப்பாங்க. அவங்களே பேசிட்டு வெச்சிருவாங்க. `உங்களுக்காக உயிரையே கொடுப்பேன்'னு பேசினவங்க எல்லாரும் இப்போ கல்யாணம் பண்ணி குழந்தைங்களோட வாழறாங்க. இந்த மாதிரி பொய்களாலதான் `லவ்' எல்லாம் ஆர்வம் இல்லாம போச்சு.''

ஷில்பா`மெல்ல திறந்தது கதவு' சீரியல்ல குழந்தைங்களோட நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கு..?
``குழந்தைங்கனாலே குறும்புதானே... செட்டே ஜாலியா இருக்கும். எப்பவுமே எங்களுக்குப் பொழுதுபோக்கு அவங்கதான். பாட்டு, டான்ஸ்னு ஏதாச்சும் பண்ணிட்டே இருப்பாங்க. டயலாக்லாம் தப்பு இல்லாம பேசும்போது  ஆச்சர்யமா இருக்கும். இப்போ உள்ள பசங்களுக்கெல்லாம் ரொம்பவே திறமையானவங்களாதான் இருக்காங்க!''

உங்களோட பியூட்டி சீக்ரெட்..?
எப்பவும் மகிழ்ச்சியா இருப்பேன். என் மனசுக்கு பிடிச்ச விஷயங்களை மட்டும்தான் பண்ணுவேன்.  என்னுடைய ஆடைகளை எல்லாம் என் அக்காதான் தேர்வு பண்ணுவாங்க. ஆடைக்கு மேட்சா ஆபரணங்கள் போடுறது நமக்கு நல்ல `லுக்'கை கொடுக்கும்.''

பாலச்சந்தர் சாருடைய சீரியலில் நடித்த அனுபவம்..?
அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கு அவர்தான் குரு. கதையோட கருவை சொல்லிட்டு நடிக்க சொல்லிடுவாரு. நடிகர்களை அவங்க இஷ்டப்படி நடிக்க வைப்பாரு. அவரோட சீரியல்ல நான் கிளிசரின் போடாம அழுவேன். அந்த அளவுக்கு நிஜத்தோட ஒப்பிட்டு என்னை நடிக்க வெச்சாரு. பாலசந்தர் சார் இறந்து போறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிகூட அவரைப் பார்த்துட்டு வந்தேன். அவர் ஒரு நல்ல இயக்குநர் மட்டும் அல்ல... நல்ல மனுஷனும்கூட!

 

தாமரை சீரியல் ஷில்பா

 
உங்களுடைய எதிர்கால திட்டம்..?
நான் எப்பவும் கோல் செட் பண்ணிலாம் வொர்க் பண்றது இல்ல. ஆனா, என்னோட அக்காவுக்கு நான் வெளிநாட்டுல செட்டில் ஆகணும்னு ஆசை... அவங்க ஆசைதான் என்னோட ஆசையும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement