வெளியிடப்பட்ட நேரம்: 06:32 (21/06/2017)

கடைசி தொடர்பு:07:54 (21/06/2017)

8 ஜிபி ரேம்... மீண்டும் அதிரடி கிளப்பும் ஒன் பிளஸ் 5!

ஒன் பிளஸ்

ஆன்லைன் சந்தை என்பது, ’கிட் பட்ஜெட்’ மொபைல்களுக்கானது என்ற நிலையை மாற்றியது ஒன் பிளஸ் நிறுவனம். ஒவ்வொரு முறையும் ஃபிளாக்ஷிப் மாடல்களை வெளியிட்டு ஹிட் அடிக்கிறது ஒன் பிளஸ். கடந்த ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு மொபைல்களில் விமர்சகர்கள் மத்தியில் முதலிடம் பிடித்தது ஒன் பிளஸ் 3T. இன்று ஒன் பிளஸ், தன் புது மொபைலான ஒன் பிளஸ் 5 மாடலை வெளியிட்டிருக்கிறார்கள். 

ஐஃபோன் ரியர் கேமராவை பிரதி எடுப்பதுபோல  கேமராவை அமைத்திருக்கிறார்கள். டூயல் ரியர் கேமரா( 20 மெகாபிக்ஸல் + 16 மெகாபிக்ஸல் கேமரா ) , 30 நிமிடத்தில் 60% சார்ஜ் தரும் டேஷ் சார்ஜிங், ஸ்னேப்டிரேகன் 835 பிராசஸர், 3300 mah பேட்டரி, 5.5" 1080p OPTIC AMOLED டிஸ்பிளே என ஸ்பெக்ஸை அலங்கரித்திருக்கிறார்கள். 

7.25மிமி தடிமனுடன் வெளியாகியிருக்கும் ஒன் பிளஸ் 5 தான், அந்த நிறுவனத்தின் ஸ்லிம்மான மொபைல். 6 ஜிபி, 8ஜிபி ரேம் ; 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரு மாடல்களில் வெளியாகின்றன ஒன் பிளஸ் 5. 

மிட்நைட் பிளாக், ஸ்ளேட் கிரே என இரண்டு நிறங்கள் மட்டுமே ஆப்ஷன்ஸ். இந்தியாவில் வரும் 22ம் தேதி மொபைல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க