Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், 2017-18 ஆம் கல்வியாண்டிற்கான மாணவியர்சேர்க்கை நடைபெறுகிறது. அறிவியல் பாடப் பிரிவில் 500 மதிப்பெண்களுக்குக் கீழ் பெற்ற மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதற்கான முதற்கட்டக் கலந்தாய்வு கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது.

college

அன்று, சிறப்புப் பிரிவினருக்கானக் கலந்தாய்வும், 8 ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கானக் கலந்தாய்வும் நடைபெற்றது. அதன்படி 8 ஆம் தேதி பி.காம்., மற்றும் பி.காம் (சிஎஸ்) பாடப் பிரிவுக்கு 800 முதல் 500 மதிப்பெண் பெற்றவர்களுக்கானக் கலந்தாய்வு நடந்தது. 9 ஆம் தேதி, அறிவியல் பாடப் பிரிவுக்கு 800 முதல் 500 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 12 ஆம் தேதி கலைப் பாடப் பிரிவுகளுக்கு 200 முதல் 150 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.

college

இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 19 ஆம் தேதி பி.காம் மற்றும் பி.காம் (சிஎஸ்) பாடப் பிரிவுக்கு 500 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்களுக்கு நடந்தது. நேற்று, அறிவியல் பாடப் பிரிவுக்கு 500 மதிப்பெண்களுக்குக் கீழ் பெற்றவர்களுக்குக் கலந்தாய்வு நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 650 மாணவிகள் பங்கேற்றனர். இன்று, கலை பாடப் பிரிவுக்கு 150 மதிப்பெண்களுக்குக் கீழ் பெற்றவர்களுக்கும் நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close