இந்திய விமானப்படையில் வேலை... AFCAT தேர்வுக்குத் தயாராவது எப்படி? A-Z தகவல்...

இந்திய விமானப்படையில் பல்வேறு உயர் பதவிகளை நிரப்புவதற்கான   `AIRFORCE COMMON ADMISSION TEST' (AFCA ) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய உடல்திறனும் ஊக்கமும்கொண்ட பட்டதாரி இளைஞர்கள், இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.     

தேர்வு குறித்தும் பணிகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார் கல்வியாளர் ஆர்.ராஜராஜன். 

ராஜராஜன்

பணி விவரங்கள்:
1. வான் பணி
2. தரைப் பணி  - டெக்னிக்கல்
3. தரைப் பணி - நான்-டெக்னிக்கல்

 

 

 

இந்தத் தேர்வுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


விமானப்படை

1. வான் பணி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகாலப் பட்டப்படிப்பு அல்லது நான்கு ஆண்டுகால B.E அல்லது B.Tech  படிப்புகளில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்ணுடன்  தேர்ச்சிபெற்றவர்கள், இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் +2-வில் கணிதம், இயற்பியல் பிரிவுகளைப் படித்து, ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். 

2)  தரைப் பணி -டெக்னிக்கல்

அ) ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயர் (எலெக்ட்ரானிக்ஸ்), கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் அப்ளிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன், மைக்ரோ வேவ் இன்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கன்ட்ரோல் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் பி.இ., பி.டெக்  படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் +2-வில் கணிதம், இயற்பியல் பாடங்களில் 60 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

விமானப்படை

ஆ) ஏரோநாட்டிக்கல்  இன்ஜினீயர் (மெக்கானிக்கல்)

ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங், ஏரோநாட்டிக்கல்  இன்ஜினீயரிங், கிராஃப்ட்  மெயின்டனன்ஸ்  இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமொபைல்  போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் படித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.  

3) தரைப் பணி (நான் - டெக்னிக்கல்) 

நிர்வாகம் மற்றும் லாஜிஸ்டிக் சார்ந்த படிப்புகளில் ஏதேனும் மூன்று ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர்கள், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் கல்விப்பணி என்ற ஒரு பிரிவு உள்ளது. இதற்கு ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வேதியியல், புள்ளியியல், பன்னாட்டுத் தொடர்பு, உளவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., மேலாண்மை, பொதுத்தொடர்பு, இதழியல் உள்ளிட்ட பிரிவுகளில்  60 சதவிகித மதிப்பெண்ணோடு எம்.பி.ஏ., எம்.ஏ., எம்.டெக் பட்டம்பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது மற்றும் உடல்தகுதி:

20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள், வான் பணிப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். கமர்ஷியல் பைலட் லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும். உயரம், குறைந்தது 162.5 செ.மீ இருக்க வேண்டும். உயரத்துக்கேற்ற எடையும் இருக்க வேண்டும். கால்களின்  நீளம் குறைந்தது 99 செ.மீ முதல் அதிகபட்சம் 120 செ.மீ வரை இருக்க வேண்டும். கூர்ந்த பார்வைத்திறன் அவசியம். மற்ற பணிகளுக்கு, ஆண்களுக்கு குறைந்தது 157.5 சென்டிமீட்டரும், பெண்களுக்கு 152 சென்டிமீட்டர் உயரம் அவசியம். அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். 

தேர்வு பற்றி...

AIRFORCE COMMON ADMISSION TEST தேர்வு, இரண்டு மணி நேரம் நடைபெறும். வெர்பல் எபிலிட்டி, நியூமெரிக்கல் எபிலிட்டி, ரீசனிங், பொது அறிவு, மிலிட்டரி எபிலிட்டி போன்ற பிரிவுகளில் தேர்வுக்கான கேள்விகள் அமையும். 
தரைப் பணி தொழில்நுட்பப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், `இன்ஜினீயரிங் நாலெட்ஜ் டெஸ்ட்' (Engineering Knowledge Test) என்ற தேர்வைத் தனியாக எழுத வேண்டும்.

விமானப்படை

 

AIRFORCE COMMON ADMISSION TEST  தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள், டேராடூன், மைசூர், காந்திநகர், வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெறும் ஏர்ஃபோர்ஸ் செலெக்‌ஷன் போர்டு (Airforce Selection Board ) நடத்தும் நேர்முகத்தேர்வில் பங்கேற்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

www.careerairforce.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க, கடைசி நாள்: 29.06.2017 
தேர்வு நடக்கும் நாள்: 27.08.2017 
விண்ணப்ப நடைமுறைகள், முந்தைய தேர்வுகள் குறித்த விரிவான விவரங்களை, மேற்கண்ட இணையதளத்தில் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!